தேடல் விடியல் தரும்

காகித ஆயுதம்

அறிவேனடி
பெண்ணே வல்லவனுக்கு
புல்லும் ஆயுதம்
என்று


உணர்ந்தேன் 
காகிதமும் ஆயுமானதை 
உன் திருமண 
பத்திரிகையால் 

காதல்

கண்ணில் தோன்றி
காமத்தில் முடிவதில்லை
இதயத்தில் தோன்றி
இறக்கும் வரை
கூடவே வருவது
காதல்!

விழிகள் செய்த 
போரில் இதயங்கள் 
செய்த ஒப்பந்தம்தான் 
காதல்!!   

யாரும் செய்யலாம்
இந்தக் காதலை
காதலிக்க தெரிந்தால்!

உடலை நோக்கமல் 
உள்ளதை பார்ப்பது
உண்மைக்காதல்!

சாதி அறியாதது 
காதல்! 
மதம் பார்க்காதது 
காதல்! 

அளக்க முடியாதது 
கடலின் சீற்றம் 
மட்டுமல்ல - ஆழமான 
காதலும்தான்!

உயிரும் உடலும் 
வெவ்வேரனாலும் 
ஒன்றாக  இருப்பது
இனிமைக்  காதல்!

அடிமைதான் இந்தக் 
காதலுக்கு மனிதனோடு 
கடவுளும்!

இறப்பிலும் இனிமை 
காண்பது இந்தக் 
காதல் மட்டுமே!

காலங்கள் மாறினாலும் 
கனவுகள் கலைந்தாலும் 
காதலர்கள் அழிந்தாலும் 
வாழ்ந்துகொண்டே இருக்கும் 
இந்தக் காதல் 

என்றும் வாழ்க!

--
என்றும் அன்புடன் உங்கள் சகா
**பயமறியான்**
          

நட்பு!!!!

தொடர் எழுத்து வார்த்தைகள்
தந்தை தெரியாமல்
பிறந்து விடலாம் !
தாயில்லாமல்
வளர்ந்து விடலாம்!
நண்பன் இல்லாமல்
வாழ முடியுமா?


உன்ன உணவு
உடுத்த உடை
இருக்க இடம்
சுவாசிக்க காற்று
இவற்றை போல
நட்பும் ஓர்
அத்தியாவசிய தேவைதான்!!


கண்ணீர்போல்
கரைந்தொடுவது அல்ல
நட்பு   - கண்ணிலேயே
கருவிழியாக
இருப்பது!!


காணல் நீரல்ல
நட்பு - கார்மேகம்
போன்றது!!


காதல் போல
நட்பிலும் பிரிவுண்டு
ஆனால் நிரந்தரமானது
இல்லை இந்த பிரிவு!


காற்றில்ல தேசம்
உயிரில்லா உடல்
நரம்பில்லா வீணை
இவற்றை போல
விறகுகட்டை தான்   
நண்பனில்லா வாழ்கை!


அழுத்தமான நட்புக்கு
ஆழமான அன்பே
அணிகலன்!


கல்லுரி கலைந்தவுடன்
கடற்கரை மணலில்
கனவுகளை பகிர்ந்துகொண்டு
ஒன்றாக உணவுண்டு
உறங்குவதால் மட்டும்
உண்மை நட்பு
கிடைத்துவிடாது!!


உண்மையான உணர்வினை
பகிர்ந்து கொள்பவனே
உயிர் நண்பன்!


முதல் பார்வையிலேயே
முழுமை பெறாதது
நட்பு !


சோதனை என்றால்
சொல்லிக்கொள்ளாமல்
ஓடாது நட்பு !


பிளந்து கிடக்கும்
நெஞ்சினில் அமுதமாய்
அன்பை பொழிவது
ஆழமான நட்பு!


நிழல்கூட தன்
நிலை மாற்றி
காட்டும் - மரணம்
வரை நீண்டு வருவது
நல்ல நட்பு மட்டும் தான்!!


சாட்சிஇல்லாத
மரணத்தின் தொடக்கம்
நண்பர்களின்
நட்பின்
அழிவு !!


------------
என்றும் நட்புடன் உங்கள் சகா
**பயமறியான்**
    
  


  

சமர்ப்பணம் !!!

பத்து மாதம் என்னைக்
கருவறையில் வைத்துக்
கற்றுகொடுத்த என்
அன்னைக்கும் !

பாசங்களையும்
வேசங்களையும்
பகுத்துணரும் பக்குவ
எண்ணங்களை வழங்கிய
தந்தைக்கும் !

இவ்வுலக வியாக்கியான 
விந்தைகளை உள்ளூரக் 
கற்றுகொடுத்த என் 
குருவனவர்களுக்கும் !

என்னுள் இருக்கும் 
உணர்வுகளுக்கு 
உயிர் கொடுக்கும் 
தோழர்களுக்கும் !

எனை ஈன்ற இந்த 
தேசத்திரு நாட்டிற்கும் !

ஆறறிவு படைத்த 
மனிதனாய் என்னை 
படைத்திட்ட அந்த 
இறைவனுக்கும் !

இத்தரணியில் எப்போதும் 
வாழும் இயற்கை அன்னைக்கும் 
இந்த "பிழைகளை"
தொடர் எழுத்து வார்த்தைகளாய் 
சமர்பிகின்றேன்!!

அன்புடன் உங்கள் சகா
**பயமறியான்**