தேடல் விடியல் தரும்

படித்ததில் பிடித்தவை

/* ஏழ்மை */



அந்த
ஏழை மாணவன்
நேற்று இரவு
முழுவதும் படித்தான்
தேர்வு என்பதற்க்காக
அல்ல - பௌர்ணமி
என்பதால்!

****************************************************

/* விருந்து */ 

படித்தேன்
பட்டம் பெற்றேன்..!
நண்பர்களுக்கு  
விருந்து வைத்தேன்..!!

தினமும்  
என்னை எழுப்பிய
சேவலை அடித்து...!!!  

**********************************************

சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

இளம் குருதி
பாய்ந்தோடும் - என்
இந்திய குடி மக்களுக்கு
சுதந்திர தின வாழ்த்துக்கள்!!


இருட்டில் பெற்று
விடிவதற்குள் - பெற்ற
சுதந்திரத்தை இன்றைய
அரசியல்வாதிகளிடம்
அடகு வைத்துவிட்டோம் !!


காமராஜர் ஆட்சி,
அண்ணா ஆட்சி - என
இன்றைய அரசியல்
ஆட்சிகள் அனைத்தும்
கண்டோம் - ஆனால்
எப்போது காணபோகிறோம்
மக்களாட்சியை??


எப்போது காணபோகிறோம்
நம் நாட்டின் வளர்ச்சியை!!


இன்று சுதந்திரம்
மறைந்து அதில்
ஒளிந்து இருக்கும்
தந்திரம் தான் - சுதந்திரமாய் இருக்கிறது!!


2020 இந்தியா வல்லரசு - இது
இன்றைய கனவுதான் - ஆம்
நினைவாக போகும் கனவு!!


எப்போது காணப் போகிறோம் - நம்
கனவு தேசத்தை!!


அணு அளவும்
பயமில்லை என்று
அனுவையும் பிளந்தாயிற்று!!


இந்த வையத்தில் - அணு
தேவை இல்லை - அதையும்
மிஞ்சிய அன்பும்
அனைத்தையும் கொடுக்கும்
ஆற்றுபடுத்தப்பட்ட மனிதவள
ஆற்றல் தான் - நம்
தேசத்தை வளப்படுத்தும்
வலுப்படுத்தும்!!
ஒன்று சேர்வோம் !
வளம் பெறுவோம் !!
வலுபடுத்துவோம் !!!


செங்குருதி பாய்ச்சி - என்
தேசம் காக்க தன்
இன்உயிர் நீத்த
தேச வீரர்களுக்கு
பெரியதோர் வீர வணக்கம்!!


ஜெய்ஹிந்த்